වතිකානු විදේශ අමාත්‍ය අගරදගුරු පෝල් රිචඩ් ගැලගර් හිමිපාණන් ශ්‍රී ලංකාවේ සංචාරයක

ශුද්ධාසනයේ රාජ්‍යයන් සහ ජාත්‍යන්තර සංවිධාන සමඟ සබඳතා පිළිබඳ ලේකම්, අගරදගුරු පෝල් රිචඩ් ගැලගර් හිමිපාණන් 2025 නොවැම්බර් 3 සිට 8 වැනි දින දක්වා ශ්‍රී ලංකාවේ නිල සංචාරයක නිරත වනු ඇත.

ශ්‍රී ලංකාව සහ ශුද්ධාසනය අතර රාජ්‍යතාන්ත්‍රික සබඳතා ස්ථාපිත කිරීමේ 50 වැනි සංවත්සරය සැමරීම නිමිත්තෙන් ශ්‍රී ලංකාවේ විදේශ කටයුතු, විදේශ රැකියා සහ සංචාරක අමාත්‍ය විජිත හේරත්ගේ ආරාධනාවකට අනුව මෙම සංචාරය සිදු කෙරේ.

මෙම සංචාරය අතරතුරදී, අගරදගුරු ගැලගර් හිමිපාණන් ජනාධිපති අනුර කුමාර දිසානායක සහ අගමැතිනි හරිනි අමරසූරිය හමුවන අතර, විදේශ කටයුතු, විදේශ රැකියා සහ සංචාරක අමාත්‍ය විජිත හේරත් සමඟද නිල සාකච්ඡා පවත්වනු ඇත.

රාජ්‍යතාන්ත්‍රික සබඳතා ස්ථාපිත කොට එළැඹෙන 50 වැනි සංවත්සරය සනිටුහන් කරමින් විශේෂ අනුස්මරණ උත්සවයක්ද කොළඹ ගාලු මුවදොර හෝටලයේදී පැවැත්වෙන අතර, එහිදී අගරදගුරු ගැලගර් හිමිපාණන් දේශනයක්ද පැවැත්වීමට නියමිතය. 

2019 වසරේ එල්ලවූ පාස්කු ඉරිදා ප්‍රහාරයන්ගෙන් බලපෑමට ලක් වූ පල්ලි ඇතුළුව රට පුරා සංස්කෘතික හා ආගමික වශයෙන් වැදගත්කමක් ඇති ස්ථාන නැරඹීමද මෙම වැඩසටහනට ඇතුළත් වේ.

විදේශ කටයුතු, විදේශ රැකියා සහ සංචාරක අමාත්‍යාංශය

2025 ඔක්තෝබර් 31 වැනි දින

வத்திக்கான் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராயர் போல் ரிச்சர்ட் கல்லாகரின் இலங்கைக்கான வருகை

திரு ஆட்சிப்பீடத்தின் நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளுடனான உறவுகளுக்கான செயலாளர் பேராயர் போல் ரிச்சர்ட் கல்லாகர், 2025 நவம்பர் 3 முதல் 8 வரை இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்வார்.

இலங்கைக்கும், திரு ஆட்சிப்பீடத்திற்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் நிறுவப்பட்ட 50 வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில், இலங்கையின் வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத்தின் அழைப்பின் பேரில் இவ்விஜயம் மேற்கொள்ளப்படுகிறது.

இவ்விஜயத்தின் போது, பேராயர் கல்லாகர் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய ஆகியோரை சந்திப்பதுடன், வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத்துடன் உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவார்.

இராஜதந்திர உறவுகளின் 50 வது ஆண்டு நிறைவைக் குறித்து, கொழும்பில் உள்ள காலி முகத்திடல் ஹோட்டலில் நடைபெறவுள்ள சிறப்பு நினைவு நிகழ்வில் பேராயர் கல்லாகர் உரை நிகழ்த்தவுள்ளார்.

2019 ஆம் ஆண்டு உயிர்த்தெழுந்த ஞாயிறு தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட தேவாலயங்கள் உட்பட நாடு முழுவதும் உள்ள கலாச்சார மற்றும் மத முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்கு கள விஜயம் செய்வதும் இந்நிகழ்ச்சியில் உள்ளடங்கும்.

வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு

மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு

கொழும்பு-01

2025 அக்டோபர் 31

Vatican Foreign Minister Archbishop Paul Richard Gallagher to visit

Sri Lanka

Archbishop Paul Richard Gallagher, Secretary for Relations with States and International Organizations of the Holy See, will undertake an official visit to Sri Lanka from 3rd to 8th November 2025.

The visit is undertaken at the invitation of the Minister of Foreign Affairs, Foreign Employment & Tourism of Sri Lanka, Vijitha Herath, to commemorate the 50th Anniversary of the establishment of diplomatic relations between Sri Lanka and the Holy See.

During the visit, Archbishop Gallagher will call on President Anura Kumara Disanayaka, Prime Minister Harini Amarasuriya, and will hold official talks with the Minister of Foreign Affairs, Foreign Employment & Tourism, Vijitha Herath.

A special commemorative event marking the 50th anniversary of diplomatic relations will also be held at the Galle Face Hotel in Colombo, where Archbishop Gallagher will deliver an address.

The programme will further include visits to sites of cultural and religious significance across the country including churches affected by the Easter Sunday attacks in 2019.

Ministry of Foreign Affairs,

Foreign Employment and Tourism

31 October 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *